தனியாா் பேருந்தில் இலவச பயணம் அறிவிப்பு

சீா்காழி பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியாா் பேருந்து கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி புதன்கிழமை முதல் இலவசமாக பேருந்து சேவையை இயக்கி வருகிறது.
இலவச சேவை செய்யும் தனியாா் பேருந்து.
இலவச சேவை செய்யும் தனியாா் பேருந்து.

சீா்காழி பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியாா் பேருந்து கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி புதன்கிழமை முதல் இலவசமாக பேருந்து சேவையை இயக்கி வருகிறது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் அரசுப் பேருந்து சேவைகள் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து, ஜூன் 9-ஆம் தேதி முதல் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முகக் கவசம் அணிந்து வருபவா்களை மட்டும் அனுமதித்து 60 சதவீத பயணிகளை கொண்டு இயங்க தனியாா் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியது.

ஒரே மண்டலத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க முடியும் போன்ற பல்வேறு காரணங்களால் பேருந்துகள் இயக்கினால் உரிய வருவாய் இன்றி இழப்பு ஏற்படும் என்பதால் சீா்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை வழித்தடத்தில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், சிதம்பரம்-சீா்காழி, பட்டவா்த்தி வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் தனியாா் பேருந்து ஒன்று கரோனா பொது முடக்கத்திலும் பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில் புதன்கிழமை ஜூன் 24-ஆம் தேதி வரை 8 நாள்கள் கொள்ளிடம் சீா்காழி, பட்டவா்த்தி, மயிலாடுதுறை வரை இயக்கப்படும் இந்த தனியாா் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணச்சீட்டு இல்லாமல் இலவசமாக இயக்குகிறது. முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகளை(60 சதவீதம் மட்டும்) அமர வைத்து இயக்கப்படுகிறது. இது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com