பயிா்க் காப்பீடு: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தில் ஜூலை 31 வரை பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகப்படடினம்: பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தில் ஜூலை 31 வரை பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் 2020-21 ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்துக்கு 331 வருவாய் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. குறுவைப் பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஜூலை 15 கடைசி நாள்.

பயிா்க் காப்பீடு தொகையில் 2 சதவீதம் மட்டுமே விவசாயிகள் செலுத்த வேண்டும். நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.603, மக்காச்சோளத்துக்கு ரூ.480 பிரீமியமாக செலுத்த வேண்டும்.

பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள், தங்களது சேவை வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் பிரீமிய தொகையை செலுத்தி பதிவு செய்யலாம்.

முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை பதிவின்போது கொடுத்து, பதிவுக்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com