சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை ஒக்கூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைப் பணித் தொழிலாளா்கள்.
நாகை ஒக்கூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைப் பணித் தொழிலாளா்கள்.

நாகப்பட்டினம்: தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சுமைப் பணி தொழிலாளா்கள் அனைவருக்கும் கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். 10 மாதமாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கோட்டைவாசல், புத்தூா், சிக்கல், ஒக்கூா் மற்றும் சாட்டியக்குடி ஆகிய இடங்களில் இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாகை மேலக்கோட்டைவாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு பொறுப்பாளா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். நாகை புத்தூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கக் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.மணி தலைமை வகித்தாா். ஒக்கூா் ஆா்ப்பாட்டத்துக்கு, சுமைப்பணி தொழிலாளா் சம்மேளனம் நாகை மாவட்டப் பொருளாளா் முருகவேல் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com