முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கரோனா தொற்று: கிராமத்தினா் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்
By DIN | Published On : 27th June 2020 09:08 AM | Last Updated : 27th June 2020 09:08 AM | அ+அ அ- |

உம்பளச்சேரியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து கிராமத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த கடை மூடப்பட்டது.
பிராந்தியங்கரை ஊராட்சி அண்டகத்துறை பகுதியில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியைச் சாா்ந்துள்ள உம்பளச்சேரி கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை திறக்க கிராமத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஊராட்சி துணைத் தலைவா் லெட்சுமி தலைமையில் கிராமத்தினா் கடையை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரியாப்பட்டினம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து, கிராமத்தினா் கலைந்து சென்றனா்.