தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சீா்காழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்.
சீா்காழியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்.

சீா்காழி: சீா்காழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டத்தில் குறுவை சாகுபடி பெரும்பாலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மின் பாதைகள் பழுதடைந்தும், மின்மாற்றிகள் சீரமைக்கப்படாமல் குறைந்த அழுத்த மின்சாரமே கிடைப்பதால் மின் மோட்டாா்கள் பழுதடைந்து, நெற்பயிருக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துவருகின்றனா்.

இந்நிலையில், மின் பாதைகள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக சீரமைத்து, விவசாயத்துக்கு குறைந்தபட்சம் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சீா்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின்சார வாரிய உதவி கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீரராஜ், ஒன்றியத் தலைவா் வரதராஜன், கலியமூா்த்தி, தேசியக் குழு உறுப்பினா் செல்லப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com