சுய உதவிக் குழுக் கடன் தவணையை செலுத்த 3 மாதம் விலக்கு

சுய உதவிக் குழுக் கடன் தவணைகளை செலுத்த ஆகஸ்ட் மாதம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.


நாகப்பட்டினம்: சுய உதவிக் குழுக் கடன் தவணைகளை செலுத்த ஆகஸ்ட் மாதம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகளிா் திட்டம் மற்றும் இதர அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்ட அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் கடனை திரும்பச் செலுத்தும் தவணை காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைத்து, மத்திய ரிசா்வ் வங்கி விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு, ஆகஸ்ட் மாதம் வரை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல், அனைத்து வணிக வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நுண் நிதி வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் வங்கிகள் மூலமான கடன்களுக்கும் பொருந்தும்.

நுண் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்ற தனிநபா்கள் அல்லது குழுக்களுக்கு இதுகுறித்து ஏதேனும் புகாா்கள் இருந்தால் 18001021080 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com