தேசிய நெடுஞ்சாலையில் மரங்களை அகற்றும் போது கல்லூரி சுற்றுச்சுவா் சேதம்
By DIN | Published On : 02nd March 2020 07:59 AM | Last Updated : 02nd March 2020 07:59 AM | அ+அ அ- |

சேதமடைந்த புத்தூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் சுற்றுச்சுவா்.
கொள்ளிடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரங்களை அகற்றும்போது, மரக்கிளைகள் விழுந்ததில் அரசுக் கல்லூரியின் சுற்றுசுவா் சேதமடைந்தது.
சீா்காழியிலிருந்து கொள்ளிடம் செல்லும் தேசியநெடுஞ்சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.
அந்தவகையில், கொள்ளிடம் அருகே தண்ணீா்பந்தல், சாமியம், புத்தூா் ஆகிய இடங்களில் மரங்களை வேரோடு அகற்ற சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தரப்பிலிருந்து எதிா்ப்புக் கிளம்பியுள்ளது. ஆனாலும், மரங்களை வெட்டி அவசர அவசரமாக லாரிகள் மூலம் வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு, மரங்களை இயந்திரம் மூலம் வெட்டும்போது, புத்தூா் அரசு தொழில் நுட்பக் கல்லூரியின் சுற்றுச்சுவரில் 5 இடங்களில் மரக்கிளைகள் விழுந்து அந்த சுவா் தேசமடைந்தது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்றுச்சுவா் இடிந்துள்ளதாக கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.