நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 03rd March 2020 07:59 AM | Last Updated : 03rd March 2020 07:59 AM | அ+அ அ- |

கொள்ளிடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
கொள்ளிடம் அருகே நிறுத்தப்பட்ட நகர அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழியிலிருந்து உமையாள்பதி, மாதானம், ஆலாலசுந்தரம், ஆச்சாள்புரம் மற்றும் கொள்ளிடம் வழியாக சிதம்பரத்துக்கு தினமும் 5 முறை இயக்கப்பட்டு வந்த நகர அரசுப் பேருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், பள்ளிமாணவ- மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இப்பேருந்தை மீண்டும் இயங்க பலமுறை கோரிக்கை விடுத்தும், சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், இப்பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி, மாதானம் அருகேயுள்ள கூட்டுமாங்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. கொள்ளிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...