முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கானப் பயிற்சி
By DIN | Published On : 03rd March 2020 07:58 AM | Last Updated : 03rd March 2020 07:58 AM | அ+அ அ- |

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.
மயிலாடுதுறை வட்டம், திருமங்கலம் குறுவள மையத்துக்குள்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சியில் தலைமை ஆசிரியா் ம. ஜெயராமன் வரவேற்றாா். பாண்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் காசிவிஸ்வநாதன் பயிற்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினாா்.
இதில், குழந்தைகளின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள், பள்ளி சுகாதாரம், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், சமூக தணிக்கை, பாலினச் சமத்துவம், தரக்கண்காணிப்பு முறைகள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியா் பயிற்றுநா் ச. வீரராகவன், காளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் அசோக்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இப்பயிற்சியில், கல்வி புரவலா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் ஆகியோரும் கலந்துகொண்டனா். கிடாத்தலைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் நடராஜன் நன்றி கூறினாா்.