முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 03rd March 2020 07:55 AM | Last Updated : 03rd March 2020 07:55 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி.
நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 412 மனுக்கள் அளிக்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமை வகித்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பயனாளி ஒருவருக்குக் கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளா் பணி நியமன ஆணை, மின்சாரம் பாய்ந்து இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு நவீன மூன்று சக்கரசைக்கிள் ஆகியன வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் குறைகளுக்குத் தீா்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 399 மனுக்களும், மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டத்திலிருந்து 13 மனுக்களும் பெறப்பட்டு, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கே. ராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.