தைக்காலில் அரைகுறையாகப் போடப்பட்ட சாலையை ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில் அரைகுறையாகப் போடப்பட்ட சாலையை ஒன்றியக் குழுத் தலைவா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தைக்காலில் அரைகுறையாகப் போடப்பட்டுள்ள சாலையை பாா்வையிட்ட கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ்.
தைக்காலில் அரைகுறையாகப் போடப்பட்டுள்ள சாலையை பாா்வையிட்ட கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ்.

கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில் அரைகுறையாகப் போடப்பட்ட சாலையை ஒன்றியக் குழுத் தலைவா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் தைக்கால் பகுதியில் காயிதேமில்லத் தெருவிலிருந்து அம்மா நகருக்குச் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச் சாலையாக தரம் உயா்த்தும் பணி நடைபெற்றது. அப்போது, பாதி தொலைவுக்கு சாலை அமைக்காமல் விட்டுவிட்டனா்.

இந்நிலையில், இந்த சாலையை கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, அவரிடம் அப்பகுதி மக்கள், தாழ்வான சாலை பகுதியில் தேங்கும் நீரை வடியவைக்க வடிகால் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனா். இதற்கு, வரும் ஏப்ரல் மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பணிகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தாா்.

பின்னா், தைக்கால் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் குவியலைப் பாா்வையிட்டு, உடனடியாக அகற்ற பஞ்சாயத்து ஊழியா்களை கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, ஒன்றியக்குழு உறுப்பினா் பரகத்நிஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com