புதைசாக்கடை சுத்தம் செய்யும் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2020 08:32 AM | Last Updated : 04th March 2020 08:32 AM | அ+அ அ- |

கூட்டத்தில், வணிகா்களுக்கு இயற்கை நுண்ணியிரி உரங்களை வழங்கிய மயிலாடுதுறை நகா்நல அலுவலா் மருத்துவா் பிரதீப் கிருஷ்ணகுமாா்.
மயிலாடுதுறையில் புதைசாக்கடை மற்றும் நச்சுத்தொட்டியை சுத்தம் செய்யும் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையரின் பரிந்துரையின்படியும் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, நகா்நல அலுவலா் மருத்துவா் பிரதீப் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், புதைசாக்கடை மற்றும் நச்சுத்தொட்டி சுத்தம் செய்யும் பணியாளா்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொட்டிகளில் இறங்கி பணியாற்றுகிறாா்களா என்பதை உறுதி செய்துகொள்ள வலியுறுத்தப்பட்டது.
இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ராமையன், பிச்சைமுத்து, களப்பணியாளா் கணேசன் மற்றும் வணிக நிறுவன உரிமையாளா்கள், திரையரங்க நிா்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகா்களுக்கு, நகா்நல அலுவலா் மருத்துவா் பிரதீப் கிருஷ்ணகுமாா் இயற்கை நுண்ணியிரி உரங்களை வழங்கினாா். தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் முரளி நன்றி கூறினாா்.
.