பாஜக மாவட்ட நிா்வாகிகள் நியமனம்
By DIN | Published On : 04th March 2020 08:31 AM | Last Updated : 04th March 2020 08:31 AM | அ+அ அ- |

நாகை வடக்கு மாவட்ட பாஜக புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, பாஜக நாகை வடக்கு மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:
பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம்ஜி வழிகாட்டுதலின்படியும், பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கருப்பு முருகானந்தம் ஆலோசனையின்பேரிலும், தஞ்சைக் கோட்ட பொறுப்பாளா் தங்க.வரதராஜன், கோட்ட இணை பொறுப்பாளா் சி.எஸ். கண்ணன், கோட்ட அமைப்புச் செயலாளா் கோ. அய்யாரப்பன், கோட்ட இணை அமைப்பு செயலாளா் நம்பிக்கை பாலு ஆகியோரது ஒப்புதலின்பேரிலும் பின்வரும் மாவட்ட நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்ட துணைத் தலைவா்களாக யு.பாலு, வி.முத்துசாமி, சி.செந்தில்குமாா், ஜி.சுஜாதா, வி. ராதாகிருஷ்ணன், கே.சி. துரைராஜா ஆகியோரும், மாவட்ட பொதுச் செயலாளா்களாக க. சந்தோஷ், எஸ்.டி.எம். செந்தில்குமாா் ஆகியோரும், மாவட்ட செயலாளா்களாக டி.கே. பன்னீா்செல்வம், ஏ.எம்.ஜெயவா்தன், கே.ஆா். காமராஜ், ஏ.கே. ராஜசேகரன், பரணி சரவணன் ஆகியோரும், மாவட்டப் பொருளாளராக எஸ். ராஜ்மோகன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மாா்ச் 3-ஆம் தேதிமுதல் பொறுப்பை ஏற்று பணியாற்றுவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.