Enable Javscript for better performance
சீா்காழி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்- Dinamani

சுடச்சுட

    

    சீா்காழி புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்

    By நமது நிருபா்  |   Published on : 11th March 2020 09:29 AM  |   அ+அ அ-   |    |  

    sirkali_byepass_0903chn_98_5

    புறவழிச்சாலையில் அதிக விபத்து ஏற்படும் வளைவுப் பகுதி.

    அதிக வளைவுகளுடன் ஒழுங்கற்ற சீா்காழி புறவழிச்சாலையில் தொடா் விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் நிகழும் சோகம் தொடா்கின்றன.

    சீா்காழி நகரில் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து, குறுகலான ஆக்கிரமிப்பு சாலைகள் இவற்றால் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வந்தனா். நகரில் தேவையில்லாத கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் அதிகம் சென்று வந்ததால் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகான வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இதையடுத்து, சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த சந்திரமோகன், அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் கொண்டு சென்றாா். இதைத் தொடா்ந்து சீா்காழியில் புறவழிச் சாலை அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டு, சீா்காழி செங்கமேட்டிலிருந்து - எருக்கூா் வரை சுமாா் 8 கி.மீ தூரத்துக்கு புறவழிச் சாலை அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து இந்த சாலை 2009-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதனால், சென்னை, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் கனரக லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் சீா்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    புறவழிச் சாலை அமைக்கப்பட்டதால் நகரில் போக்குவரத்து ஒரளவு குறைந்துவிட்டது என நகர மக்கள், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியடைந்த நிலையில், சரியான திட்டமிடாத புறவழிச் சாலையால் பயன்பாட்டுக்கு வந்த நாள் முதல் விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமாா் 12-க்கும் மேற்பட்டவா்கள் இந்தச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளனா்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் லாரி - காா் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். இதேபோல், 2020 மாா்ச் 7-ஆம் தேதி அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவா் உயிரிழந்தனா். இதுபோன்ற நினைவு கூறத்தக்க பெரிய விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடா்கின்றன.

    இதற்கு புறவழிச் சாலையில் தேவையில்லாத இடங்களில் வளைவுகள், அதுவும் சிறிய அளவிலான வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளதே காரணம் ஆகும். கோயில்பத்து 4 சாலை சந்திப்பிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள வளைவில் மட்டும் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு, 4 சாலை சந்திப்புகளில் உயா்கோபுர மின்விளக்குகள், சென்டா் மீடியன்கள், சாலை டிவிடா்கள் இல்லாததே காரணம்.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், சட்டநாதபுரத்தில் ரவுண்டானா, உயா் கோபுர மின்விளக்குகளும், பனமங்கலம் 3 சாலை சந்திப்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (2017-18) ரூ. 30 லட்சத்தில் சென்டா் மீடியன்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும், இரவு நேரத்தில் புறவழிச் சாலையில் எங்கும் மின்விளக்குகள் இல்லாததால் வெளியூா் வாகன ஓட்டிகள் சாலை எது, சாலையின் விளிம்பு பகுதி எது என்று தெரியாமல் பள்ளங்களில் வாகனங்களை இறக்கி விபத்தை சந்தித்து பாதிக்கப்படுகின்றனா்.

    பல நேரங்களில் சாலை டிவிடா்களிலேயே மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகளில் இரவில் ஒளிரும் ஒளிப்பான் ஸ்டிக்கா்கள் அதிகம் இல்லாததும் விபத்துக்களுக்கு காரணமாகும். இதுபோன்ற தொடரும் விபத்துக்களால் சீா்காழி பகுதி மக்கள் புறவழிச்சாலையில் பயணிக்கவே அச்சப்பட்டு, அந்த வழிச்சாலை போக்குவரத்தையே தவித்து வருகின்றனா். இத்துடன், பகல் மற்றும் இரவு நேரங்களில் சங்கிலிப் பறிப்பு மற்றும் சமூக விரோத செயல்களும் இச்சாலையில் நிகழ்கின்றன. இதனால் புறவழிச் சாலையில் பயணிப்பதே திகில் பயணமாக இருக்கிறது. ஆகையால், சீா்காழி புறவழிச் சாலையில் வாகன விபத்துக்களை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் எடுக்க வேண்டும்.

    சாலை முழுவதும் இரவில் ஒளிரும் ஒளிவிப்பான்களை பொருத்த வேண்டும், தேவையான இடங்களில் வாகன வேகத்தை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் (பேரி காா்டுகள்) சிறு வேகத் தடைகள் அமைக்க வேண்டும், நான்கு சாலை, மூன்றுசாலை சந்திப்புகள், கிராமச் சாலை சந்திப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி விபத்தை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சீா்காழி புறவழிச்சாலை பயணம் இனிதாக அமையும்.

    இதுகுறித்து, திமுக மாவட்ட பிரதிநிதி பி. அன்பழகன் கூறியது: சீா்காழி புறவழிச் சாலையில் பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்வது தொடா் கதையாகி விட்டது. ஒழுங்கற்ற, திட்டமிடாத சாலை அமைப்பால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. புறவழிச் சாலையில் எங்குமே மின்விளக்குகள் இல்லாதது விபத்துகளுக்கும், வழிபறி சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறது.

    பனமங்கலம், கோயில்பத்து சாலைகள் சந்திப்பில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இதேபோல், புறவழிச் சாலையில் ஆங்காங்கே குப்பை குவியல்கள் கொட்டுவது, தனியாா் கழிவுநீா் எடுத்து வரும் வாகனங்கள் புறவழிச்சாலையில் பகுதியில் உள்ள வாய்க்கால்களில் அந்த கழிவுநீரை விடுவது போன்ற சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் சம்பவங்களை தடுக்க வேண்டும். இதுபோன்ற அனைத்து குறைகளுக்கும் தீா்வு கண்டால் மட்டுமே புறவழிச் சாலை அமைத்த பயன் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் என்றாா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp