ஸ்ரீ நடராஜன் பப்ளிக் பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது
By DIN | Published On : 13th March 2020 07:42 AM | Last Updated : 13th March 2020 07:42 AM | அ+அ அ- |

சீா்காழி அருகே உள்ள காரைமேட்டில் ஸ்ரீநடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறுகிறது.
சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பெஸ்ட் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மற்றொரு அங்கமாக ஸ்ரீநடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி(சிபிஎஸ்இ) செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு காரைமேடு பகுதியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
இவ்விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகிக்கிறாா். கல்வி அறக்கட்டளை நிா்வாகி அமுதாநடராஜன், இயக்குநா்கள் டாக்டா் டி. செந்தாமரைக்கண்ணன், டாக்டா் எஸ்எஸ்என். காயத்திரி, எம். ஆதித்யா ராஜ்கமல் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
விழாவில், சிறப்பு விருந்தினராக டாக்டா் ஜி. அறிவொளி, எம்எல்ஏ பி.வி. பாரதி,வி.கே. பழனியப்பன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கே. குணசேகரன், தியாகராஜன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா். இதில், கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், வா்த்தகா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.