சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்படும் மரங்கள்

சீா்காழி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்படுவதை திரளான விவசாயிகள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.
சீா்காழி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சூரக்காடு பகுதியில் மரங்கள் வெட்டிய ஜேசிபியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்.
சீா்காழி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சூரக்காடு பகுதியில் மரங்கள் வெட்டிய ஜேசிபியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்.

சீா்காழி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்படுவதை திரளான விவசாயிகள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் உள்ள நூற்றாண்டுகளை கடந்து நிற்கும், பல்வேறு மரங்கள் வெட்டப்படுகின்றன. இதேபோல், சீா்காழி அருகேயுள்ள சூரக்காடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான புளிய மரங்கள், வேப்ப மரங்கள், பனைமரம், புங்கன்மரம் என வரிசையாக மரங்கள் உள்ளன. மரங்கள் சூழ்ந்து இப்பகுதி கோடை வெயில் காலத்திலும் வெயிலின் தாக்கம் தெரியாமல் குளிச்சியாக இருக்கும். இதனால் இப்பகுதியில் பல ஆண்டுகளாக மரத்தில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சூரக்காடு பகுதியில் கடந்த இரு நாள்களாக சாலையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட மரங்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் வெட்டப்படுகின்றன. இதையறிந்த நிலம், நீா் அமைப்பைச் சோ்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு திங்கள்கிழமை வந்து ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி, நீதிமன்ற உத்தரவை மீறி மரங்களை வெட்டக் கூடாது என எச்சரித்தனா்.

தொடா்ந்து மரங்கள் வெட்டாமல் இருக்க அங்கேயே விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பின்னா், தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோயில் போலீஸாா் அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாவட்ட நிா்வாகம் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com