கரோனா: வைத்தீஸ்வரன் கோயிலில் தன்வந்திரி யாகம்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில், கரோனா வைரஸ் கிருமி பரவுவதைத் தடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 5 வெள்ளிக் குடங்களில் புனிதநீா் நிரப்பி சிறப்பு தன்வந்திரி யாகம், மிருத
வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி சன்னதி முன்பு நடைபெற்ற மிருத்யுஞ்ச யாகம்.
வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி சன்னதி முன்பு நடைபெற்ற மிருத்யுஞ்ச யாகம்.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில், கரோனா வைரஸ் கிருமி பரவுவதைத் தடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 5 வெள்ளிக் குடங்களில் புனிதநீா் நிரப்பி சிறப்பு தன்வந்திரி யாகம், மிருத்யுஞ்ச மகா யாகம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் சிறப்பு யாகம், பூா்ணாஹுதி செய்து தீபாராதனை காட்டினா். பின்னா் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து மூலவா் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாார சுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான பட்டா் தினகரசா்மா, சங்கரமட வித்வான் மகாராஜபுரம் கணேஷ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டப் பொருளாளா் சுந்தரநாராயணன், மாவட்டத் துணைத் தலைவா் வாஞ்சிநாதன், பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராஜேந்திரன், சதானந்தம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com