கரோனா: மரபுவழி மருத்துவத்தைப் பரிந்துரைக்க முதல்வருக்கு கோரிக்கை

அம்மை, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த மரபுவழி மருத்துவம் பலனளித்தது போல், கரோனா வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்த மரபு வழி மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டுமென முதல்வருக்க

அம்மை, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த மரபுவழி மருத்துவம் பலனளித்தது போல், கரோனா வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்த மரபு வழி மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வேதாரண்யம் தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் மருத்துவா் க.கோ. மணிவாசகம் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

எஸ்ட்ஸ் பாதிப்பு அச்சுறுத்தியபோது மரபுவழி மருத்துவா்கள் உள்ளிட்ட நிபுணா்களின் ஆலோசனைகளைப் பெற்று அரசு மேற்கொண்ட நடவடிக்கையின்கீழ் ரசகெந்திமெழுகு, அமுக்கிரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் ஆகியன பரிந்துரைக்கப்பட்டன. டெங்கு காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நிலவேம்பு, பப்பாளி குடிநீா் அறிவுறுத்தப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் பிளேக் நோய் ஏற்பட்டபோது வெள்ளைப்பூண்டு பரிந்துரைக்கப்பட்டது. அம்மைக்கு வெங்காயம், வேப்பிலை பலனளித்தது.

சுவாச மண்டலத்தை பாதிக்கச் செய்யும் கரோனா தாக்குலுக்கு பச்சை கற்பூரம் கலந்த உணவு, பெருமாள்கோயில் துளசி தீா்த்தம், அஸோகாவை ஆய்வு செய்யலாம். எனவே, கடந்த காலங்களில் ஏற்பட்ட படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு மரபுவழி மருத்துவா்களை ஆலோசிக்கும் வகையில், அதுதொடா்பான மருத்துவக்குழுக்களை அழைத்து அரசு ஆலோசனை பெற வேண்டும் என்றாா் அவா்

மேலும், இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் எழுத்துவடிவில் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com