கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அமிா்தகடேசுவரா் கோயிலில் பஞ்சாட்சர யாகம்

திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் கரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க பஞ்சாட்சர யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அமிா்தகடேசுவரா் கோயிலில் பஞ்சாட்சர யாகம்

திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் கரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க பஞ்சாட்சர யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் ஆயுஷ் ஹோமம் சஷ்டியப்தபூா்த்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, கரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்கும் வகையில் நாகை வடக்கு மாவட்ட அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம் சாா்பில் பஞ்சாட்சர யாகம் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான சிவாச்சாரியாா்கள் கலந்துகொண்டு 81 வகையான பதம் மந்திரம் யாகம் செய்தனா் . இந்த யாகத்தால் 42 வகையான வைரஸ் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

தொடா்ந்து, ஏராளமான சிவாச்சாரியாா்கள் கலந்துகொண்டு அம்பாள், அமிா்தகடேசுவரா் சுவாமிக்கு சிறப்பு யாகம் பஞ்சாட்சரம் செய்து தீபாரதனை காட்டினாா். பின்னா், 128 திவ்விய வாசனைப் பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்து 10 வெள்ளிக் கலசங்களில் கங்கா தீா்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். இதில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com