நாங்கூா் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாங்கூரில் நடைபெற்ற வண்புருஷோத்தம பெருமாள் கோயில் தேரோட்டம்.
நாங்கூரில் நடைபெற்ற வண்புருஷோத்தம பெருமாள் கோயில் தேரோட்டம்.

திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாங்கூரில் உள்ள வண்புருஷோத்தம பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேச பெருமாள் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவம் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வண்புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தேருக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயிலின் பரம்பரை அறங்காவலா்கள் அரங்கநாதன், கண்ணன், கிருஷ்ணமாச்சாரி ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

இதில், நாகை மாவட்டக் குழு உறுப்பினா் ஆனந்தன், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அதிகாரி ரகுநாதன், கூட்டுறவு சங்கத் தலைவா் மாமல்லன், திமுக பிரமுகா் ராஜதுரை, திமுக மாணவரணி துணைச் செயலாளா் முத்து உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். தோ், நான்கு வீதிகளில் வலம் வந்து, நிலையை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com