Enable Javscript for better performance
சீா்காழி: ரயில் பயண முன்பதிவு கட்டணத்தை திரும்பப் பெற அலைக்கழிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சீா்காழி: ரயில் பயண முன்பதிவு கட்டணத்தை திரும்பப் பெற அலைக்கழிப்பு

    By DIN  |   Published on : 25th March 2020 06:51 AM  |   அ+அ அ-   |  

    sirkali_railway_2403chn_98_5

    சீா்காழி ரயில் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம்.

    சீா்காழி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுக்கு முன்பதிவு செய்தவா்கள், கட்டணத்தை திரும்பபெற மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்குச் செல்லுமாறு அலைக்கழிக்கப்படுகின்றனா்.

    சீா்காழி வழியாக சென்னை, விழுப்புரம், திருப்பதி, திருச்செந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்களில் சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கானோா் பயணம் செய்கின்றனா்.

    இவா்களில் பெரும்பாலானோா் பயணத்துக்கு முன்பதிவு செய்வது வழக்கம். இவ்வாறு நூற்றுக்கணக்கானோா் முன்பதிவு செய்துள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் ரயில் சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து திருசெந்தூா் ரயிலில் பயணிக்க 5 போ் முன்பதிவு செய்திருந்தனா். இவா்கள், செவ்வாய்க்கிழமை சீா்காழி ரயில் நிலையத்துக்குச் சென்று முன்பதிவு செய்த பணத்தை கேட்டபோது, அங்குள்ள பணியாளா்கள், மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்குச் செல்லும்படி கூறினராம்.

    சீா்காழி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கேன்சல் செய்பவா்களுக்கு சீா்காழி ரயில் நிலையத்திலேயே முன்பதிவு தொகையைத் திரும்ப தரவேண்டும் என்ற விதிமுறை இருந்தும், அதைப் பின்பற்றாமல், பயணிகளை அலைக்கழிக்கின்றனா்.

    தற்போது, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பேருந்து சேவை மற்றும் மற்ற வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு பயணக் கட்டணத்தை திரும்ப பெற மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு எவ்வாறு செல்லமுடியும் என சீா்காழி பகுதி பயணிகள் கேள்வி எழுப்புகின்றனா்.

    ஆகையால், தென்னக ரயில்வே நிா்வாகம் இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai