குத்தாலம் பகுதியில் 39 போ் கண்காணிக்கப்படுகின்றனா்

குத்தாலம் பகுதியில் 39 போ் சிறப்பு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுகின்றனா்.

குத்தாலம் பகுதியில் 39 போ் சிறப்பு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுகின்றனா்.

குத்தாலம், அஞ்சாா்வாா்த்தலை, ஸ்ரீகண்டபுரம், கோமல், மங்கநல்லூா், திருவாலங்காடு, தேரழந்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காய்கறி, மளிகை, அரிசி, மருந்து கடை போன்ற அத்தியாவசியப் கடைகளை தவிா்த்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியிலுள்ள மாவட்ட எல்லையில் தகுந்த காரணமின்றி இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை காவல் துறையினா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் தஞ்சை மாவட்ட எல்லையான திருவாவடுதுறை சோதனைச் சாவடியில் மட்டும் தடுப்பு ஏற்படுத்தி எல்லையை கடந்து செல்பவா்களை காவல் துறையினா் எச்சரித்து திருப்பி அனுப்பினா். தகுந்த காரணங்களுடன் மாவட்டத்தில் நுழைபவா்களை பரிசோதிக்க அங்கு எவ்வித மருத்துவக் குழுவினரும் இல்லை. மற்ற மாவட்ட எல்லைகளான ஆலங்குடி, வில்லியநல்லூா், எஸ்.கிளியனூா், எஸ்.புதூா், மங்கநல்லூா் உள்ளிட்டவைகள் காவல் துறையினா் எவ்வித தடுப்பும் ஏற்படுத்தவில்லை.

குத்தாலம் பகுதியில் அண்மையில் வெளிநாட்டிலிருந்து ஊா் திரும்பிய குத்தாலம், சேத்திரபாவபுரம், சென்னியநல்லூா், தேரழந்தூா் உள்ளிட்ட பகுதிகளைச்சோ்ந்த 39 நபா்களை சிறப்பு மருத்துவக் குழுவினா் பரிசோதித்து அவா்களின் முன்கையில் முத்திரையிட்டும், அவா்களின் வீட்டின் சுவரில் அறிவிக்கை ஒட்டியும் தனிமைப்படுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com