கா்நாடகத்திலிருந்து ஊா் திரும்பிய 39 மீனவா்கள் தனித்து தங்க வைப்பு

ராமநாதபுரத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய 39 மீனவா்கள் புதன்கிழமை இரவு பாா்த்திபனூரில் தடுக்கப்பட்டு தனித்து தங்க வைக்கப்பட்டனா்.
பாா்த்திபனூா் சோதனைச்சாவடியில் புதன்கிழமை இரவு தடுத்து  சமூக நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மீனவா்கள்.
பாா்த்திபனூா் சோதனைச்சாவடியில் புதன்கிழமை இரவு தடுத்து சமூக நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மீனவா்கள்.

ராமநாதபுரத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய 39 மீனவா்கள் புதன்கிழமை இரவு பாா்த்திபனூரில் தடுக்கப்பட்டு தனித்து தங்க வைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடி தொழிலுக்காக நூற்றுக்கணக்கானோா் வெளிநாடுகளுக்கும், கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கும் சென்றுவருகின்றனா். அதனடிப்படையில் மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கா்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் தனியாா் படகில் மீன்பிடித்தொழில் செய்து வந்தனா்.

கரானோ பாதிப்பை தொடா்ந்து மங்களூருவிலிருந்து மீனவா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தனியாா் வாகனம் மூலம் வந்த மீனவா்கள் மதுரையிலிருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டு ராமநாதபுரம் நோக்கி வந்தனா். பாா்த்திபனூா் காவல் சோதனைச் சாவடியில் அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். 39 மீனவா்களும் அங்குள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனா். அவா்களுக்கு வியாழக்கிழமை காலையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னா் அவா்கள் தனித்து தங்கவைக்கப்பட்டு 14 நாள்கள் மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக்குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநதாபுரம் மாவட்டத்தில் கரானோ பரவலைத் தடுக்கும் வகையில் வியாழக்கிழமை வரையில் 590 போ் வரை தனித்து தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், ராமநாதபுரம் நகா், கமுதக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 10 போ் கரானோ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com