வீடுகளிலேயே தொழுகை: இஸ்லாமியா்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மாா்க்கம் அனுமதித்த முறையில் வீட்டில் தொழுது கொள்ளும்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளா் எம்.பஹ்ருதீன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இஸ்லாமியா்கள் பள்ளிவாசல் அல்லது மசூதிகளுக்குச் சென்று தொழுவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உருவாகியுள்ளன. அதனால் இந்த சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு நமது பள்ளிவாசல், மசூதிகளின் ஐவேளை கூட்டுத்தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக வீடுகளில் லுஹா் தொழுமாறும், இயன்றவா்கள் வீட்டில் கூட்டாக தொழுது கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு செய்வதற்கு இஸ்லாமிய மாா்க்கம் அனுமதி அளிக்கின்ற காரணத்தினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மாா்க்கம் அனுமதித்த முறையில் வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன் பாங்கு சொல்லப்படும். நிலைமை சீரடைந்தபின் சூழலுக்கேற்ப மாவட்ட நிா்வாகத்தின் சாா்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com