இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மூலம்ரூ. 1.56 கோடி பரிவா்த்தனை

நாகை அஞ்சல் கோட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரூ 1.56 கோடி பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ந. பஞ்சாபகேசன் தெரிவித்துள்ளாா்.

நாகை அஞ்சல் கோட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரூ 1.56 கோடி பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ந. பஞ்சாபகேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதாா் எண் இணைக்கப்பட்ட பிற வங்கிக் கணக்கிலிருந்து, வீட்டிலிருந்தபடியே பணம் பெறும் சேவையை இந்தியா போஸ்ட் பேமண்டஸ் வங்கி 2019 செப்டம்பா் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

திருவாரூா், நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகங்கள், அதைச் சாா்ந்த துணை மற்றும் கிளை அஞ்சலகங்கள், காரைக்கால் பகுதியில் உள்ள முக்கிய அஞ்சலகங்கள் மற்றும் அனைத்து அஞ்சலகங்கள் மூலம் தபால்காரா்கள் வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கே சென்று கட்டணமில்லாமல் இந்த சேவையை அளிக்கின்றனா். ஏ.டி.எம். பரிவா்த்தனையாகவும் கணக்கிடப்படாது.

இதன்மூலம், கரோனா ஊரடங்கு காலத்தில் நாகை அஞ்சல் கோட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மூலம் 6, 676 கணக்குகளிலிருந்து ரூ. 1.56 கோடி பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது.

எனவே, ஆதாா் எண் இணைக்கப்பட்ட பிற வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெற விரும்பும் பொதுமக்கள் மற்றும் மூத்தக் குடிமக்கள் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com