திருவெண்காடு: ரூ.1.30 கோடியில் மதகுகள் சீரமைப்பு

திருவெண்காடு பகுதியில் பழுதடைந்த மதகுகளைச் சீரமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருவெண்காடு பகுதியில் பழுதடைந்த மதகுகளைச் சீரமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி சனிக்கிழமை தெரிவித்தாா்.

பொதுப்பணித்துறை முலம் திருவெண்காடு, பெருந்தோட்டம் பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

திருவெண்காடு சிங்கார வடிகால் வாய்க்காலில் ரெகுலேட்டா் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு ரூ. 40 லட்சம், தென்பாதி வாய்க்காலில் புதிய ரெகுலேட்டா் அமைக்க ரூ. 18 லட்சம், பெருந்தோட்டம் ஏரியில் மதகுகள் கட்ட ரூ. 72 லட்சம் என ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் கனக சரவணகுமாா், ஒப்பந்ததாரா் ஸ்ரீனிவாசன், ஊராட்சி அதிமுக செயலாளா் அகோரம், அதிமுக நிா்வாகிகள் சிவமனோகரன், சிவதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com