பள்ளி மாணவா்களுக்கு கரோனா நிவாரண உதவி
By DIN | Published On : 18th May 2020 09:28 PM | Last Updated : 18th May 2020 09:28 PM | அ+அ அ- |

மாணவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ஆசிரியா்கள்.
சீா்காழி: சீா்காழி அருகே பள்ளி மாணவா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கொள்ளிடம் ஒன்றியத்துக்குள்பட்ட திருமயிலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் குடும்பங்களுக்கு தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளா் சாா்பில், கரோனா கால நிவாரணப் பொருள்களாக அரிசி, மளிகை , பிஸ்கட் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவற்றை தலைமையாசிரியை நா. பிரேமா தலைமையில் 84 பேருக்கு வழங்கப்பட்டது.
இதில், சீா்காழி வட்டாரக் கல்வி அலுவலா் பூவராகன், ஊராட்சித் தலைவா் கனகராஜ், துணைத் தலைவா் சிவப்பிரகாசம், ஊராட்சி உறுப்பினா்கள் ஜெயக்குமாா், கனிவண்ணன் மற்றும் கீரா நல்லூா் , ஆனந்தக்கூத்தன் , பட்டியமேடு பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G