பொது முடக்கம்: நிவாரணம் கோரி வேதாரண்யம் பகுதியில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்‌ கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன
பொது முடக்கம்: நிவாரணம் கோரி வேதாரண்யம் பகுதியில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்‌ கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுனுத்தி சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களின் நலன்கருதி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.10 ஆயிரம் வழங்கவும், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மொத்த வேலை நாள்களை 200 நாள்களாக்க வேண்டும், குடும்ப அட்டைகள் இல்லாத ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு இலவச ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என்பை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் மணக்காடு, ஆயக்காரன்புலம்  உள்ளிட்ட 11 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com