நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கடந்த 50 தினங்ங்களுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் உடல் உழைப்பு தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி அளிக்க வேண்டும்,

 காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல் சக்தி அமைப்புடன் இணைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக் கோரியும், விவசாயிகளுக்கு எதிரான மின் திட்டத்தை மத்திய அரசுரத்து செய்ய வலியுறுத்தியும், கரோனா சீரமைப்பு நிதியின் கீழ் அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்து நிபந்தனை இன்றி புதிய பயிர் கடன் வழங்க கோரியும்,

 நாகை மக்களவை உறுப்பினர் எம். செல்வராஜ் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.பழனிச்சாமி, கே. உலகநாதன், தேசிய கட்டுப்பாட்டு குழு செயலாளர், வழக்கறிஞர் வையாபுரி ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com