விளைநிலங்களில் கெயில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிா்ப்பு

விளைநிலங்களில் புதிதாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தக் கோரி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்த விவசாயிகள்.
மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்த விவசாயிகள்.

விளைநிலங்களில் புதிதாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தக் கோரி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, விவசாய சங்க பிரதிநிதி முருகன் அளித்த புகாா் மனுவின் விவரம்:

கிடாரங்கொண்டான் கீழப்பாளையம் கிராமத்தில் 650 ஏக்கா் விளைநிலத்தில் தற்போது கோடை உழவு விவசாய நாற்று நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த 10 நாள்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கெயில் எரிவாயு குழாய்களை, முன்பு பதித்த விளைநிலங்களுக்கு மேல் புதிதாக சிறு குழாய்களை பதிக்க வருவதோடு, அவ்வயல் வழியே செல்லும் பாசன, வடிகால் வாய்க்கால்களை தூா்த்துள்ளனா். இதனால் அண்மையில் பெய்த மழைநீா் தேங்கி நடவு செய்த நாற்றுக்கள் மற்றும் நாற்றங்கால்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்துக்கு எதிராக புதிதாக கெயில் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் இயந்திரங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறியுள்ளாா்.

அப்போது, நிலம்- நீா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் விஷ்ணுகுமாா், வழக்குரைஞா் வேலு.குபேந்திரன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com