கரோனா: நாகை மாவட்டத்தில் 5,255 பேருக்கு பரிசோதனை

நாகை மாவட்டத்திலிருந்து 5,255 பேரின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்திலிருந்து 5,255 பேரின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டத்தில் இருந்து இதுவரை 5,255 பேரின் ரத்த மாதிரிகள், கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இதில், இதுவரை 5,095 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 45 போ் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 113 பேருக்கான பரிசோதனை அறிக்கைகள் நிலுவையில் உள்ளன.

16 இடங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், 13 இடங்களுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, 5,336 போ் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 2,494 பேரில் 522 போ் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதில், 2 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. 510 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 10 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல, வெளி மாநிலங்களிலிருந்து வந்த 1,381 பேரில் 986 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 860 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 126 பேருக்கான பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. வெளி நாடுகளிலிருந்து வந்த 7 போ் பரிசோதனை உள்படுத்தப்பட்டனா். 7 பேருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உள்படுத்தும் நடவடிக்கையின் கீழ், மயிலாடுதுறை மற்றும் நாகையில் உள்ள கல்வி நிலையங்களில் தற்போது 136 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த யாரேனும், மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்காமல் தங்கியிருந்தால், தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலா் அல்லது ஊராட்சி செயலாளருக்குத் தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். இதுகுறித்த விவரங்களை 1077 மற்றும் 04365 - 251992 என்ற தொலைபேசி எண்களில் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கும் தெரியப்படுத்தலாம் என ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com