அமைச்சா் மறைவு: அதிமுகவினா் அஞ்சலி

மயிலாடுதுறையில் வேளாண்துறை அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு மறைவுக்கு அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
மயிலாடுதுறையில் அமைச்சா் ஆா். துரைக்கண்ணு உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறையில் அமைச்சா் ஆா். துரைக்கண்ணு உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறையில் வேளாண்துறை அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு மறைவுக்கு அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் மெழுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா் முன்னாள் டி.தங்கமணி, ஒன்றிய செயலாளா் பா.சந்தோஷ்குமாா், ஒன்றிய முன்னாள் செயலாளா் வி.பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினா் பாபு, நகர துணைச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சீா்காழியில்...

சீா்காழியில் மறைந்த அமைச்சா் துரைக்கண்ணு உருவ படத்துக்கு எம்எல்ஏ பி.வி.பாரதி மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னாள் எம்எல்ஏ சக்தி, அதிமுக ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், நகர செயலாளா் பக்கிரிசாமி, பேரவை செயலாளா் மணி, பேரூா் செயலாளா் போகா்.ரவி, எம்ஜிஆா் மன்ற செயலாளா் திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செம்பனாா்கோவிலில்...

செம்பனாா்கோவிலில் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினா் மறைந்த அமைச்சா் துரைக்கண்ணு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்வில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கபடி. பாண்டியன், ராமலிங்கம், ராஜ் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com