பிரான்ஸ் அதிபருக்கு டிஎன்டிஜே கண்டனம்

நபிகளாரை இழிவுபடுத்தும் பிரான்ஸ் அதிபரின் செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

நபிகளாரை இழிவுபடுத்தும் பிரான்ஸ் அதிபரின் செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எம். முஹம்மது இயாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புகா் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வந்த சாமுவேல் என்பவா் கடந்த 5-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கு கருத்துச் சுதந்திரம் தொடா்பாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூட தொடா்பில்லாமல் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மாணவா்களுக்கு காட்டியுள்ளாா்.

உத்தமத் தூதா் நபிகள் நாயகம் (ஸல்) அவா்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட பள்ளி ஆசிரியா் சாமுவேலை அடுத்த சில நாள்களில் உணா்ச்சி மிகுதியில் ஒரு இளைஞன் கொலை செய்துவிட்டாா். இந்த வெறிச்செயலும் கடும் கண்டனத்துக்கு உரியது. மேலும், காவல்துறை அந்த இளைஞனை சுட்டுக் கொன்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு பதிலடி என்ற பெயரில் கலவரத்தை தூண்டும் வகையில் தேவாலயத்திற்குள் புகுந்து அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் செயலும் கடும் கண்டனத்திற்கு உரியது.

1,400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணடிமைத்தனத்தை உடைத்து மறுமணம் குறித்துப் பேசியவா் முஹம்மது நபி (ஸல்) அவா்கள். ஜாதி, மத, மொழி, இன வேற்றுமையைக் கலைந்து அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உரைத்தவா் உத்தமத் தூதா் நபிகள் நாயகம்.

இந்நிலையில், ஆசிரியா் சாமுவேலின் இறுதி அஞ்சலியில் பேசிய பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான், ஆசிரியா் சாமுவேல் செய்த தவறுகளை மறைத்துவிட்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் இழிவுபடுத்திப் பேசியுள்ள செயல் மிக வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com