காவிரியை புனித நதியாக அறிவிக்கக் கோரி குடகு முதல் பூம்புகார் வரை யாத்திரை

காவிரியை புனித நதியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத துறவியர் பேரவை சார்பில் காவிரித் தாய் வழிபாடு யாத்திரை நடைபெறுகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

காவிரியை புனித நதியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத துறவியர் பேரவை சார்பில் காவிரித் தாய் வழிபாடு யாத்திரை நடைபெறுகிறது. 

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, குடகு மலையில் உற்பத்தியாகி பூம்புகார் வரை பாய்ந்தோடி கடலில் சங்கமிக்கும் காவிரி நதி தமிழக மக்களின் வாழ்வாதாரமாகும். கங்கை நதியை போல தென் கங்கை என புகழப்படும் காவிரியின் புனிதத்தை பாதுகாக்க வேண்டி ஆண்டுதோறும் ஜப்பசி மாதத்தில் காவிரித்தாய் வழிபாடு - யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் கடந்த மாதம் அக்டோபர் 21ஆம் தேதி குடகுமலை புறப்பட்ட யாத்திரை 7ஆம் தேதி பூம்புகார் வந்தடைகிறது. இந்த யாத்திரையில் இந்து மக்கள் கட்சியும் பங்கெடுத்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது. யாத்திரையானது குடகு மலையில் துவங்கி ஒக்கேனக்கல், ஈரோடு, கரூர், தஞ்சை, மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் நிறுவடையும். காவிரி கடலில் சங்கமிக்கும் கடற்கரையில் சிறப்பு பூஜைகளும், மகா ஆரத்தியும் நடைபெறும். காவிரி நதியை மலடாக்கி வரும் மணல் திருட்டை தடை செய்ய வேண்டும். 

காவிரியில் சாயக்கழிவுகளோ, சாக்கடை கழிவுகளோ கலப்பதை தடுக்க வேண்டும். காவிரிக்கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கங்கையைப் போல காவிரியையும் புனித நதியாக அறிவிக்க வேண்டும், காவிரியின் தூய்மையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த யாத்திரையில் துறவியர் பெருமக்களும், ஆதின கர்த்தர்களும், சிவனடியார்களும், விவசாயிகளும், பெண்களும் பெருமளவில் பங்கேற்கின்றனர்.
 இவ்வாறு சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com