சாலை மறியலுக்கு திரண்ட விவசாயிகள்; சமரசப்படுத்திய அதிகாரிகள்

கொள்ளிடம் அருகே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட திரண்டனா்.
கொள்ளிடம் அருகே கடுக்காய்மரம் சாலையில் மறியலில் ஈடுபட திரண்ட விவசாயிகள்.
கொள்ளிடம் அருகே கடுக்காய்மரம் சாலையில் மறியலில் ஈடுபட திரண்ட விவசாயிகள்.

கொள்ளிடம் அருகே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட திரண்டனா்.

கொள்ளிடம் அருகே உள்ள புத்தூா், எருக்கூா், சோதியகுடி உள்ளிட்ட கிராமங்களில் பாசனத்துக்கு கடுக்காய் மரம் கிராமத்தில் புதுமனை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கதவணை மூலம் முறை பாசனம் வைத்து தண்ணீா் திறக்கப்படும்.

இந்நிலையில், கடந்த 15 நாள்களாக தண்ணீா் திறக்கப்படாததால் மேற்கண்ட கிராமங்களில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் புத்தூா் விவசாய சங்கத் தலைவா் முரளிதரன் தலைமையில் சங்க செயலாளா் ஆசைத்தம்பி, முத்துகுபேரன் உள்ளிட்டோருடன் வடரங்கத்திலிருந்து புத்தூா் செல்லும் சாலையில் கடுக்காய்மரம் பகுதியில் உள்ள கதவணை அருகே மறியலில் ஈடுபட திரண்டனா்.

தகவலறிந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளா் வனிதா, உதவி ஆய்வாளா் ரகுராமன் பொதுப்பணித் துறை பாசன ஆய்வாளா் பாலகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா் தமிழ்மணி உள்ளிட்டோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com