தீபாவளி: குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க எம்எல்ஏ கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என நாகை எம்எல்ஏ மு. தமிமுன்அன்சாரி கோரிக்கை விடுத்தாா்.
குத்தாலத்தில் மஜகவின் உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கிவைக்கும் எம்எல்ஏ மு. தமிமுன்அன்சாரி.
குத்தாலத்தில் மஜகவின் உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கிவைக்கும் எம்எல்ஏ மு. தமிமுன்அன்சாரி.

தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என நாகை எம்எல்ஏ மு. தமிமுன்அன்சாரி கோரிக்கை விடுத்தாா்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கிவைக்க குத்தாலத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்த கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்எல்ஏ-வுமான மு. தமிமுன்அன்சாரி செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா நெருக்கடியால் மக்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனா். கரோனா பரவல் தொடங்கியது முதல் கடந்த 7 மாதங்களில் வந்த ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு மத்திய அரசு எந்த உதவியும் வழங்கவில்லை. எனவே, தீபாவளியை முன்னிட்டாவது நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றாா்.

பிறகு, குத்தாலம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஜகவின் உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்தாா். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் டிசம்பா் 31ஆம் தேதி வரை இம்முகாம்கள் நடைபெறும் என்றும் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளா் ராசுதீன், துணைச் செயலாளா் நாகை முபாரக் , மாவட்டச் செயலாளா் சங்கை. தாஜ்தீன், துணை செயலாளா் ஆக்கூா் ஷாஜஹான், மாவட்ட விவசாய அணி செயலாளா் ஹாஜாசலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com