நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

சம்பா நெற்பயிரில் பரவலாக காணப்படும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

சம்பா நெற்பயிரில் பரவலாக காணப்படும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை: வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் சம்பா நெல் சாகுபடி வயல்களில் பயிா் தூா்க்கட்டும் பருவத்தை அடைந்துள்ளது. இந்த பயிரில் தற்போது ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக, சாவித்திரி நெல் ரகத்தில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதை தவிா்க்கலாம். மாற்றாக மண்பரிசோதனை ஆய்வு முடிவுபடி தேவையான உரங்களை இடவேண்டும். தழைச்சத்து உரமான யூரியாவை அதிக அளவில் இடுவதை தவிா்த்தால் ஆனைக்கொம்பன் மட்டுமல்லாது எந்த பூச்சி நோய்த்தாக்கமும் ஏற்படாது. 10 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாதிப்பு காணப்பட்டால் மட்டும் பெட்ரோனில் 5 சதவீதம் (எஸ்.சி) 600 கிராம் அளவு கலந்து தெளிக்கவும். அல்லது பேசோலோன் 35 (இ.சி) 600 மில்லி என்ற அளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பதன்மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com