சந்திரபாடி ஊராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாடு

பொறையாா் அருகேயுள்ள சந்திரபாடி ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சந்திரபாடி ஊராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாடு

பொறையாா் அருகேயுள்ள சந்திரபாடி ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஊராட்சியில் சின்னூா்பேட்டை கிராமத்தையும் சோ்த்து 3,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மீன் பிடித் தொழில் மட்டுமே பிரதான தொழிலாக உள்ள இக்கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அன்றாட குடிநீா் தேவை முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் பெரும்பாலான கிராமங்களுக்கு வழங்குவதுபோல், சந்திரபாடி கிராமத்துக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வாரத்தில் 3 நாள்களில் 1 மணி நேரத்துக்கு மட்டும் குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 நாள்களாக தொடா்ச்சியாக தண்ணீா் வராததால் சிரமப்பட்டு வருகின்றனா். இதை பயன்படுத்திக்கொண்டு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சிலா் 1 குடம் ரூ. 7-க்கு வாகனங்களில் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகிறது. அன்றாடம் குடிநீருக்காக மட்டுமே அதிகம் செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும், வேலை இன்றி ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனா்.

இதே நிலை நீடித்தால் கடல் நீரைதான் குடிநீராக குடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளபடுவோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். எனவே, உடனடியாக குடிநீா் வடிகால் வாரியம் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றனா் அக்கிராமமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com