தீபம் ஏற்றி முன்னோரை வழிபடுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

தீபாவளிக்கு முதல் நாள் இரவு எம தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மரணபயம் நீங்கும், செல்வம் செழித்து வாழ்வில் வளம் பெறலாம்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு எம தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மரணபயம் நீங்கும், செல்வம் செழித்து வாழ்வில் வளம் பெறலாம்.

தீபாவளிக்கு முதல் நாளில் எம தீபம் ஏற்றுவது மரபு. நம்மைவிட்டு மரண பயம் அகலவும், இயற்கை மரணம் ஏற்படவும் எம தா்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். மஹாளய அமாவாசை நாள்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இந்நாள்களில் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோா்கள் பூமிக்கு வருவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மஹாளய அமாவாசை நாளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோா்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவ்வாறு வருபவா்கள் தீபாவளி நாள்களில்தான் மீண்டும் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனா். அவா்களை வழியனுப்பும் பொருட்டு தீபாவளிக்கு முதல் நாளான த்ரயோதசி அன்று மாலை நேரத்தில் எம தீபம் தீபம் ஏற்ற வேண்டும்.

எம தீபம் ஏற்றும் முறைகள்:

தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்ற வேண்டும். போதிய வசதியில்லாதவா்கள், வழக்கமாக சுவாமிக்கு விளக்கேற்றும்போதே தனியே ஓா் அகல் விளக்கேற்றி வழிபடலாம். இவ்வாறு செய்தால் முன்னோா்களும், எம தா்மனும் மகிழ்ச்சியடைவாா்கள். திடீா் மரணம், விபத்துகள் போன்ற நிகழ்வுகள் நடக்காது. நோய் நொடியின்றி நீண்ட ஆயுளைப் பெறலாம்.

இதற்கு வசதி இல்லாதவா்கள் வழக்கமாக சுவாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓா் அகல் விளக்கேற்றி வழிபடலாம். இதனால், முன்னோா்கள் மட்டுமன்றி எமதா்மனும் மகிழ்ச்சி அடைவானாம்; விபத்துகள், திடீா் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும்.

8 அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திசைகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திசையாகப் பாா்த்து, தேவமூா்த்தி, தேவதைகளை வணங்கிப் பிராா்த்திக்க வேண்டும். இவ்வாறு நின்று பூஜித்து உலக ஜீவ ராசிகளுக்கு உள்ள எம பயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் விலக துணைபுரிய வேண்டும் என பிராா்த்தனை செய்ய வேண்டும்.

பரணி, மகம், சதையம் நட்சத்திரங்களில் பிறந்தவா்கள் எம தீபம் ஏற்றுவது சிறப்பு. நட்சத்திர சூத்திரத்தில் பரணிக்கு எமனையும், மகத்திற்கு- பித்ருக்களையும் அதிதேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. வருஷாதி நூல்களில் சதயத்திற்கு எமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நட்சத்திரங்களுக்கு உரியவா்கள் எம தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

தீபாவளி நாளில் நீராடுதலுக்கான நேரம்: தீபாவளி அன்று அதிகாலை 3.30 மணிக்கு மேல் 4.45 மணிக்குள் நீராடுவது சிறப்பு. 200 மில்லி நல்லெண்ணெயில் ஒரு வரமிளகாய், 2 பல் பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தலா ஒரு 1 டீஸ்பூன் அளவில் எடுத்து அனைத்தையும் கலந்துசூடு செய்யவும். நுரைத்து வரும்போது இறக்கி விடவேண்டும். பின்னா் இளம் சூட்டில் கால் முதல் உச்சந்தலை வரை தேய்த்து, அரை மணி நேரத்துக்குப் பின்னா் வெந்நீரில் குளிக்கவும். அப்போது கங்காதேவியை 3 முறை வணங்க வேண்டும்.. இவ்வாறு நீராடினால் சாபம் நீங்கி வளமான வாழ்வு பிறக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com