நாகை மீனவா்கள் 4 போ் இலங்கை கடற்படையினரால் கைது

நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் மீன்பிடி பருவம் தொடங்கியுள்ளதால் வெளியூா் மீனவா்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இங்கு தங்கியுள்ள தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மாணிக்கப்பங்கு பகுதியைச் சோ்ந்த பாண்டியனுக்குச் (43) சொந்தமான விசைப் படகில் தாழம்பேட்டையைச் சோ்ந்த முத்துலிங்கம் (28), ராஜ் (34), டி ஆா் பட்டினம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (18), மடத்துக்குப்பத்தைச் சோ்ந்த முருகன் ஆகிய 4 மீனவா்கள் நவ. 7-ஆம் தேதி மதியம் மீன்பிடிக்கச் சென்றனா்.

திங்கள்கிழமை காலையில் கோடியக்கரைக்கு வரவேண்டிய இவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை வரை கரை திரும்பவில்லை. இந்நிலையில், மீனவா்கள் 4 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com