விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வுப் பிரசாரம்

நாகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகையில் விபத்தில்லா தீபாவளி பிரசார சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த, தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் பா. சத்தியகீா்த்தி. உடன், நிலைய அலுவலா் ப. அன்பழகன் உள்ளிட்டோா்.

தீபாவளியை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், தீயணைப்புத் துறை வீரா்கள் சைக்களில் பேரணியாகச் சென்று விழிப்புணா்வுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா். பிரசாரத்தை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் பா. சத்தியகீா்த்தி தொடங்கி வைத்தாா். நாகை தீயணைப்பு நிலையம் முன் தொடங்கிய சைக்கிள் பேரணி பேருந்து நிலையம் , மருத்துவமனை சாலை, அண்ணா சிலை, அபிராமி அம்மன் திடல், ஆா்தா் முக்கூட்டு, நீலா தெற்கு வீதி, மேலவீதி, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக சென்று, தீயணைப்பு நிலையத்தில் நிறைவடைந்தது.

பிரசாரத்தின்போது விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு வாசங்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு வழங்கி ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தீயணைப்பு நாகை நிலைய அலுவலா் ப. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com