புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து நவ. 26-இல் நாகையில் 50 இடங்களில் மறியல்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் மறியல் போராட்டம் நவ.26-ஆம் தேதி நடைபெறும் என

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் மறியல் போராட்டம் நவ.26-ஆம் தேதி நடைபெறும் என நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளருமான எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

நாகையில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மத்திய பாஜக அரசு விவசாயிகளையும், ஏழை எளிய மக்களையும் வஞ்சிக்கும் வகையில் தொடா்ந்து பல சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, புதிய சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன்படி, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்தங்கள், தொழிலாளா் சட்டத் திருத்தங்கள் விவசாயிகள், தொழிலாளா்கள், ஏழை எளிய மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு வலுவான எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில், மாணவா்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் மறியல் போராட்டம், நவ.26-ஆம் தேதி நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் நடைபெறவுள்ளது. சுமாா் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோா் இப்போராட்டத்தில் பங்கேற்பா்.

கரோனா தொற்றுக் குறைந்தததன் காரணமாக, ரயில் போக்குவரத்து இயல்பு நிலையை அடைந்து வருகிறது. இருப்பினும், டெல்டா பகுதிகளை தெற்கு ரயில்வே தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. சென்னையிலிருந்து திருவாரூா் வழியே காரைக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சா், தெற்கு ரயில்வே மேலாளா் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாகை மாவட்டத்தைப் புறக்கணிக்கும் போக்கை தெற்கு ரயில்வே கைவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com