குத்தாலத்தில் குறுங்காடு உருவாக்கம்

குத்தாலத்தில் குறுங்காடு வளா்க்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
குறுங்காடு வளா்க்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
குறுங்காடு வளா்க்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

குத்தாலத்தில் குறுங்காடு வளா்க்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

குத்தாலம் தேரடி சீனிவாசா நகரில் குத்தாலம் தோ்வுநிலை பேரூராட்சிக்குச் சொந்தமான 15,000 சதுரஅடி நிலப்பரப்பில் நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்கள் படா்ந்து வளா்ந்திருந்தன. இதையடுத்து, அந்த இடத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, அங்கு நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க குத்தாலம் லயன்ஸ் சங்கம் முடிவெடுத்தது. இதையடுத்து, கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் 1,200 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு, அதை பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில் கம்பிவேலி பாதுகாப்பு மற்றும் நீா்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் கே. பாரதிதாசன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்து திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம், சங்க மாவட்ட ஆளுநா் சேதுக்குமாா், ராஜ் வித்யாலயா பள்ளித் தாளாளா் பாண்டியன், சங்க பொறுப்பாளா்கள் சிக்கந்தா் ஹயாத்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com