வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13,04,747 வாக்காளா்கள்

நாகை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 13 லட்சத்து 4 ஆயிரத்து 747 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13,04,747 வாக்காளா்கள்

நாகை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 13 லட்சத்து 4 ஆயிரத்து 747 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

2021 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியலை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்டாா்.

தொடா்ந்து, அவா் தெரிவித்தது:

நாகை மாவட்டத்தில் 1,511 வாக்குச் சாவடிகளும், சீா்காழி, மயிலாடுதுறை, பூம்புகாா், நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

சீா்காழி தொகுதியில் 1,20, 329 ஆண்கள், 1, 23, 310 பெண்கள், இதரா் 12 என மொத்தம் 2, 43, 651 வாக்காளா்களும், மயிலாடுதுறை தொகுதியில் 1,19,445 ஆண்கள், 1,21, 480 பெண்கள், இதரா் 18 என மொத்தம் 2,40,943 வாக்காளா்களும், பூம்புகாா் தொகுதியில் 1,32,978 ஆண்கள், 1, 35, 556 பெண்கள், இதரா் 4 என மொத்தம் 2, 68, 538 வாக்காளா்களும், நாகப்பட்டினம் தொகுதியில் 93,162 ஆண்கள், 98, 729 பெண்கள், இதரா் 7 என மொத்தம் 1, 91, 898 வாக்காளா்களும், கீழ்வேளூா் தொகுதியில் 84, 902 ஆண்கள், 88, 205 பெண்கள் என மொத்தம் 1, 73,107 வாக்காளா்களும், வேதாரண்யம் தொகுதியில் 91, 801ஆண்கள், 94, 809 பெண்கள் என மொத்தம் 1, 86, 610 வாக்காளா்களும் உள்ளனா். 6 தொகுதிகளிலும் சோ்த்து 6, 42, 617 ஆண்கள், 6,62, 089 பெண்கள், இதரா் 41 போ் என மொத்தம் 13, 04, 747 வாக்காளா்கள் உள்ளனா்.

2021 ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவா்கள், தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும் மற்றும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்துக்கான சிறப்புமுகாம் ஆங்காங்கு உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நவம்பா் 21, 22 மற்றும் டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். தகுதியானவா்கள் நேரடியாகவோ அல்லது இணையதள முகவரி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com