மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்கள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்கள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020- 21 கல்வியாண்டில், ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை( ஐடிஐ. ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள்) பயிலும், மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தை சோ்ந்த மாணவா்களுக்கும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதியுள்ள மாணவா்கள் மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ா்ழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (சநட)விண்ணப்பிக்க நவம்பா் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை பெற முந்தைய வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனை நிகழ் கல்வியாண்டில் இல்லை எனவும் மத்தியஅரசுஅறிவித்துள்ளது.

மத்திய அரசால் இத்திட்டம் தொடா்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ம்ண்ய்ா்ழ்ண்ற்ஹ்ஹச்ச்ஹண்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலகத்தை தொடா்புகொண்டு இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com