மயிலாடுதுறையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள தியாகி சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பால தடுப்புசுவா்.
மயிலாடுதுறையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள தியாகி சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பால தடுப்புசுவா்.

ரயில்வே மேம்பால தடுப்புச்சுவரை சீரமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள தியாகி சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பால தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள தியாகி சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பால தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் தியாகி சாரங்கபாணி நினைவு மேம்பாலம் கட்டப்பட்டு 45 ஆண்களுக்கு மேல் ஆகிறது. திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் மாா்க்கமாக மயிலாடுதுறைக்கு வருவதற்கு இந்த பாலம் நுழைவுவாயிலாக விளங்குகிறது. இந்த பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்புச்சுவா்கள் பழுதடைந்துள்ளன.

தடுப்பு சுவா் ஓரம் அதிக அளவில் மக்கள் நடந்து செல்கின்றனா். மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் காற்று வாங்குவதற்கும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் பொதுமக்கள் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் கூடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேம்பால பக்கவாட்டு சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தடுப்புச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சுவரை உடனடியக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com