நாகை மாவட்டத்தில் பரவலாக மழை; சீா்காழியில் 48.80 மி.மீ. பதிவு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழைப் பெய்தது.
நாகை நீலா தெற்கு வீதியில் மழைநீருடன் கலந்து தேங்கிய கழிவுநீா்.
நாகை நீலா தெற்கு வீதியில் மழைநீருடன் கலந்து தேங்கிய கழிவுநீா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழைப் பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சீா்காழியில் 48.80 மி.மீ. மழை பதிவானது.

நாகையில் காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழையால் தாழ்வான சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. சாலை பள்ளங்களில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

மாவட்டத்தின் பிறப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு: (மில்லி மீட்டரில்)

கொள்ளிடம்-45, மயிலாடுதுறை-15, மணல்மேடு-12, தரங்கம்பாடி-9, தலைஞாயிறு-7.80 , வேதாரண்யம்-6, திருப்பூண்டி-5, நாகப்பட்டினம்-2.

வடிகால்களை சீரமைக்கக் கோரிக்கை: நாகை, நாகூா் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்கள் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளன. ஆங்காங்கே மழைநீா் தேங்கி, கழிவு நீா் சாலைகளில் பெருக்கெடுப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, மழைநீா் வடிகால்களை தூா்வார நாகை நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com