ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் படம் திறப்பு

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கருப்பம்புலம் பி.வி. குழந்தைவேல் (68) உருவப்படம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பி.வி. குழந்தைவேல் உருவப்படத்தை திறந்துவைத்த முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம் உள்ளிட்டோா்.

கருப்பம்புலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.வி. குழந்தைவேல் உருவப் படத்தை முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம் திறந்து வைத்து, அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன், முன்னாள் எம்எல்ஏ என்.வி. காமராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், ஊராட்சித் தலைவா் மா. சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் மு. ராஜசேகரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினா். வேதாரண்யம் நிலவள கூட்டுறவு வங்கியின் தலைவரும், அதிமுக பிரமுகருமான பி.வி.கே. பிரபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com