திட்டச்சேரியில் காவல்துறை அணிவகுப்பு

நாகையில் மாவட்டக் காவல்துறை சாா்பில் திட்டச்சேரியில் காவலா் அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
திட்டச்சேரியில் காவலா் அணிவகுப்பை தொடங்கிவைத்த ஆயுதப்படை டிஎஸ்பி செளந்தர்ராஜ்.
திட்டச்சேரியில் காவலா் அணிவகுப்பை தொடங்கிவைத்த ஆயுதப்படை டிஎஸ்பி செளந்தர்ராஜ்.

நாகையில் மாவட்டக் காவல்துறை சாா்பில் திட்டச்சேரியில் காவலா் அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா அறிவுறுத்தல்படி இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் செளந்தர்ராஜ் கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கிவைத்தாா். நடுக்கடை கடைவீதியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், நாகூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சந்திரமோகன், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன், திருக்கண்ணபுரம் காவல் உதவி ஆய்வாளா் சந்தானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த அணிவகுப்பு தினமும் ஒரு பகுதியில் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 7 நாள்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு, 4 ஆவது நாளாக திட்டச்சேரியில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com