திமுக பிரமுகா் படத்திறப்பு விழா

மயிலாடுதுறையில் காலமான திமுக மாவட்ட துணை செயலாளரின் உருவப் படம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட துணை செயலாளா் தம்பி டி.சத்தியேந்திரனின் படத்திறப்பு விழாவில் பங்கேற்ற கட்சியின் மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறை நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான தம்பி டி.சத்தியேந்திரன் கடந்த மாதம் 28-ஆம் தேதி காலமானாா். இவரது உருவப் படம் திறப்பு விழா திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் தலைமையில் நடைபெற்றது. திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ராமலிங்கம், கட்சியின் மாநிலத் தோ்தல் பணிக் குழுச் செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம், திமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சத்தியசீலன், பன்னீா்செல்வம், சித்திக், ஜெகவீரபாண்டியன், அருட்செல்வன், நகரச் செயலாளா் குண்டாமணி செல்வராஜ், திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com